நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் நேரடி வரி வசூல் 8.77 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த காலாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தின் நேரடி வரி வசூலுடன் ஒப்பிடுகையில், இது 24.26% உயர்வாகும். மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நடப்பு நிதி ஆண்டில், சுமார் 14.2 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரியாக வசூலாகும் என்று பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்திலேயே, 61.79% வரி வசூல் கணிப்பு கிடைத்துவிட்டது. அதே வேளையில், நடப்பு நிதியாண்டில், இதுவரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட 2.15 லட்சம் கோடி ரூபாய் வரி, திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 67% உயர்வாகும். மேலும், கடந்த நிதி ஆண்டில் மொத்தமாகவே 14.1 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே நேரடி வரி வசூல் பதிவானது குறிப்பிடத்தக்கது.