அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்துக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ 171 போயிங் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் அருகே விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் இருந்தனர். அவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 இங்கிலாந்து, 6 போர்ச்சுகல், மற்றும் ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்கள். 14 குழந்தைகளும் பயணித்தனர். இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார்.
முதற்கட்டத்தில் 130 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்திருந்த நிலையில், ஏர் இந்தியா தற்போது 241 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.