தெலுங்கானா அரசு, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு பஸ்களில் 25% டிக்கெட் சலுகை வழங்க முடிவு செய்துள்ளது. இது சாதாரண, விரைவு, குளிர்சாதன பஸ்களுக்கு பொருந்தும்.
மகளிர் இலவச பயணத் திட்டமான ‘மகாலட்சுமி’ மூலம் தினமும் 34 லட்சம் பெண்கள் பயன் பெறுகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்திற்கான நிதியை அரசு போக்குவரத்து கழகத்திற்கு தாமதமாக வழங்குவதால், ஊழியர் சம்பளம் மற்றும் டீசல் செலவுகள் சிரமம் தருகின்றன. இந்நிலையில், ஆண்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், இந்த நடவடிக்கையால் மூத்த குடிமக்கள் அதிகமாக பஸ்களை பயன்படுத்துவார்கள்; அதேசமயம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.














