தமிழகம் முழுவதும் 35 மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 10 மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஏற்கனவே மாற்றம் செய்திருந்த நிலையில் தற்போது 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு பிரிவு இயக்குனராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜவுளித்துறை இயக்குனராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராய சம்பவங்களை தவிர்ப்பதற்காக மதுவிலக்கு பிரிவு இயக்குனர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று நாடு முழுவதும் 35 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.














