விண்வெளியில், சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை முன்னிட்டு, நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் முந்தைய மற்றும் தற்போதைய புகைப்படங்கள் உள்ளன.
கடந்த டிசம்பர் 6, 1998 ஆம் ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் 2 பாகங்கள் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த நவம்பர் 2, 2000 ஆம் ஆண்டு முதல், விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் தங்கி இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 3300 ஆராய்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டுள்ளன. இதுவரை, 21 நாடுகளைச் சேர்ந்த 273 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். இந்த தகவல்களுடன் நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த விண்வெளி நிலைய புகைப்படம் மற்றும் தற்போதைய விண்வெளி நிலைய புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.