மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் பலி

மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மாலில் இருந்து புனே நோக்கி நேற்று இரவு 33 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. நள்ளிரவு புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பேருந்து தீ பிடித்து எரிந்தது. ஒரு சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் தீயில் […]

மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மாலில் இருந்து புனே நோக்கி நேற்று இரவு 33 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. நள்ளிரவு புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பேருந்து தீ பிடித்து எரிந்தது. ஒரு சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் தீயில் சிக்கி 25 பயணிகள் உடல்கருகி உயிரிழந்தனர். காவல்துறையினர் பேருந்தில் இருந்து உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக புல்தானா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu