27 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு - மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்

இந்தியாவின் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், 27 போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மருந்துகள், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டதாகும். கடந்த மாதத்தில் மட்டும் 1302 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 27 மருந்துகள் தரமற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை […]

இந்தியாவின் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், 27 போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மருந்துகள், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.

கடந்த மாதத்தில் மட்டும் 1302 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 27 மருந்துகள் தரமற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை தயார் செய்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்றதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில், காய்ச்சல், சர்க்கரை நோய், இரும்புச்சத்து, கிருமித் தொற்று பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு ஆகியவற்றுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் உள்ளன. மேலும், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்க உதவும் மருந்து ஒன்றும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu