ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி

August 12, 2023

ஆன்லைன் சூதாட்டம் மீதான 2 மசோதாக்கள் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதியிலிருந்து நடைபெறுகிறது. நேற்று இக்கூட்டம் முடிவடைந்தது. இதில் மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் நேற்று மோடி அரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். மேலும் வன திட்ட சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா போன்ற முக்கிய […]

ஆன்லைன் சூதாட்டம் மீதான 2 மசோதாக்கள் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதியிலிருந்து நடைபெறுகிறது. நேற்று இக்கூட்டம் முடிவடைந்தது. இதில் மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் நேற்று மோடி அரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். மேலும் வன திட்ட சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதை அடுத்து மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆன்லைன் சூதாட்டம் மீதான 28% ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கான இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாக்கள் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சிகள் மக்களவையை புறக்கணித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த மசோதா நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu