நைஜீரியாவில் கடத்தப்பட்ட 287 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு

March 26, 2024

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இந்த மாத தொடக்கத்தில் வடமேற்கு பகுதியில் நடந்த கடத்தல் சம்பவத்தில் கடத்தப்பட்ட 287 பள்ளி மாணவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கடுனா மாகாணத்தின் குரிகாவில் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சுமார் 287 பள்ளி மாணவர்கள் ஆயுதமேந்திய கும்பலால் கடத்தி செல்லப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய கடத்தல் சம்பவம் ஆகும். பள்ளி மாணவர்களை மீட்க காவல் படையினர் முயற்சியில் ஈடுபட்டனர். மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் […]

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இந்த மாத தொடக்கத்தில் வடமேற்கு பகுதியில் நடந்த கடத்தல் சம்பவத்தில் கடத்தப்பட்ட 287 பள்ளி மாணவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடுனா மாகாணத்தின் குரிகாவில் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சுமார் 287 பள்ளி மாணவர்கள் ஆயுதமேந்திய கும்பலால் கடத்தி செல்லப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய கடத்தல் சம்பவம் ஆகும். பள்ளி மாணவர்களை மீட்க காவல் படையினர் முயற்சியில் ஈடுபட்டனர். மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. இது குறித்து கடுனா மாகாண ஆளுநர் உபாசானி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுவதாவது, கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் எந்த பாதிப்பும் இன்றி விடுவிக்கப்பட உள்ளார்கள். கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 287 மாணவர்கள் எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரியா அதிபருக்கு நன்றி என்று கூறினார். மாணவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் பெரிய தொகையை கேட்டதாக மாணவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். பணம் பறிப்பதற்காக ஆயுதக் குழுவினர் இவ்வாறு பள்ளி மாணவர்களை கடத்துவது அங்கு தொடர் கதையாகி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu