டெல்லியில் இந்தியாவின் 2 வது ஆப்பிள் நேரடி விற்பனையகம் திறப்பு

April 20, 2023

ஆப்பிள் நிறுவனம் டெல்லியில் தனது இரண்டாவது நேரடி விற்பனையகத்தை திறந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர், மும்பையில் தனது முதல் விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் திறந்து வைத்தார். தற்போது, டெல்லியில் இரண்டாவது விற்பனையகத்தை அவர் திறந்து வைத்துள்ளார். தெற்கு டெல்லி பகுதியில், Apple Saket என்ற பெயரில் இந்த விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 18 மாநிலங்களைச் சேர்ந்த 70 சில்லறை விற்பனை குழு உறுப்பினர்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இவர்கள், 15 மொழிகளில் பயனர்களுடன் […]

ஆப்பிள் நிறுவனம் டெல்லியில் தனது இரண்டாவது நேரடி விற்பனையகத்தை திறந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர், மும்பையில் தனது முதல் விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் திறந்து வைத்தார். தற்போது, டெல்லியில் இரண்டாவது விற்பனையகத்தை அவர் திறந்து வைத்துள்ளார்.

தெற்கு டெல்லி பகுதியில், Apple Saket என்ற பெயரில் இந்த விற்பனையகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 18 மாநிலங்களைச் சேர்ந்த 70 சில்லறை விற்பனை குழு உறுப்பினர்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இவர்கள், 15 மொழிகளில் பயனர்களுடன் உரையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மும்பை விற்பனையகத்தை விட அளவில் சிறியதாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய விற்பனையகத்தை பார்வையிடும் ஆர்வத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மும்பையைப் போலவே, டெல்லியிலும், வாடிக்கையாளர்களுடன் டிம் குக் உரையாடுவார் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu