3 ஆண்டுகளில் 7 கோடி வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் வசதி: மோடி அரசு சாதனை

August 20, 2022

மத்திய அரசின் , 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் , கிராமப்புறங்களில் உள்ள 7கோடி வீடுகளுக்கு 3 ஆண்டுகளில் குழாய் வழி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜல்சக்தி துறை சார்பில், நாடு முழுதும் உள்ள கிராமப்புறங்களுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், ஜல் ஜீவன் திட்டம் 2019ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக கிராமப்புறம் முழுதும் 2024க்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. […]

மத்திய அரசின் , 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் , கிராமப்புறங்களில் உள்ள 7கோடி வீடுகளுக்கு 3 ஆண்டுகளில் குழாய் வழி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜல்சக்தி துறை சார்பில், நாடு முழுதும் உள்ள கிராமப்புறங்களுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், ஜல் ஜீவன் திட்டம் 2019ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக கிராமப்புறம் முழுதும் 2024க்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவாவில் உள்ள 100 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசுகையில், சர்வதேச அளவில் குடிநீர் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதை சமாளிக்க, உலக நாடுகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன. நாம் 'வளர்ந்த இந்தியா'வாக உருவாக வேண்டும் என்றால், குடிநீர் பாதுகாப்பு மிகப் பெரிய சவாலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு முட்டுக்கட்டையாக இருந்துவிடக் கூடாது என்பதால் அந்த பிரச்னையை தீர்க்க கடந்த எட்டு ஆண்டுகளாக உழைத்து வருகிறோம்.

கடந்த 2019ல் ஜல் ஜீவன் திட்டம் குறித்து அறிவிக்கும் போது, நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும் 16 கோடி குடும்பங்கள் தங்கள் தண்ணீர் தேவைக்கு மற்ற நீர் ஆதாரங்களையே நம்பி இருந்தன.
மேலும், நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து கிராமப்புறங்களில் உள்ள மூன்று கோடி வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் துவங்கிய மூன்று ஆண்டுகளில், ஏழு கோடி வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 10 கோடி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. கோவாவை போலவே மேலும் பல மாநிலங்களில் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். இந்த குழாய் வழி குடிநீர் திட்டம் வாயிலாக கிராமப்புற பெண்கள் அதிக பயன் அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu