ஆரோவில் உள்ள ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் இல்லத்திலிருந்து சோழர்காலத்தை சேர்ந்த பழங்காலத்து வெண்கலச் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகள் குறித்து தகவல் பெற்று அதை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, ஆரோவில் உள்ள ஜெர்மன் தம்பதியினர் வீட்டில் ஒரு ரகசிய அறையில் 3 பழங்கால சிலைகளை வைத்திருப்பதாக தெரியவந்தது. அவர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அந்த ஜெர்மன் தம்பதியினர் இருக்கும் வீட்டிற்கு சென்று சோதனை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதனை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முதல்கட்டமாக தேடும் பொழுது சிலைகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு தொடர்ந்த கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பார்க்கும் பொழுது வெளிநாட்டில் கட்டப்பட்டது போன்று ஒரு ரகசிய அறை ஒன்று கட்டப்பட்டு முதல்மாடியில் அந்த சிலைகளை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.
நடராஜர், அம்மன், சந்திரசேகரர் ஆகிய சிலைகள் கைப்பற்றப்பட்டது. இந்த மூன்று சிலைகளுமே பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிலைகளின் தொடர்பான எந்த ஆதாரங்களும் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவற்றை பறிமுதல் செய்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சமர்பித்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்களிடம் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.