3 இந்திய வம்சாவளி விஞ்ஞானிகளுக்கு இங்கிலாந்தின் பிளாவட்னிக் விருது

January 25, 2024

இங்கிலாந்தில் இளம் விஞ்ஞானிகளுக்காக வழங்கப்படும் பிளாவட்னிக் விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் பங்காற்றியதற்காக 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ராகுல் ஆர்.நாயர், மெஹுல் மாலிக், தன்மய் பாரத் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். பிளாவட்னிக் குடும்ப அறக்கட்டளை அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்கிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராகுல் […]

இங்கிலாந்தில் இளம் விஞ்ஞானிகளுக்காக வழங்கப்படும் பிளாவட்னிக் விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் பங்காற்றியதற்காக 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ராகுல் ஆர்.நாயர், மெஹுல் மாலிக், தன்மய் பாரத் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். பிளாவட்னிக் குடும்ப அறக்கட்டளை அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்கிறது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராகுல் ஆர் நாயர் கிராபீன் மற்றும் பிற இரு பரிமாண பொருள்கள் வழியாக நீர் கனிம மூலக்கூறுகள் கடந்து செல்வதை குறித்து ஆய்வு செய்தார். போட்டான் துகள்கள் மூலம் பெருமளவிலான தகவலை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல குவாண்டம் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக மெஹுல் மாலிக் ஆராய்ச்சி செய்தார். நுண்ணுயிரி செல்களின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகளை அணு அளவில் படம் பிடிக்கும் எலக்ட்ரான் கரையோடுமோகிராபி தொழில்நுட்பத்தை தன்மய் பாரத் உயர்த்தியுள்ளார். இந்த காரணங்களுக்காக இவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu