சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் மூன்று இந்தியர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
சர்வதேச செஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வரலாற்றிலேயே முதல்முறையாக மூன்று இந்திய வீரர்கள் முதல் 10 இடங்களுக்கு இடம் பிடித்துள்ளனர். அதன்படி அர்ஜுன் எருகைசி நான்காவது இடத்திலும், தமிழக வீரரான குகேஷ் ஏழாவது இடத்திலும், பிரக்ஞானந்தா எட்டாவது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர். தற்போது முதல் 11 இடங்களில் நான்கு இந்தியர்களும், 22 இடங்களில் ஐந்து இந்தியர்களும், 29 இடங்களில் ஆறு இந்தியர்களும், 37 இடங்களில் 7 இந்தியர்களும், 46 இடங்களில் 8 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.