மணிப்பூர் மாநிலத்தில் இன்று மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்று உள்ளது. குக்கி இனத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடும் வன்முறைகள் அரங்கேறின. இது, நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மணிப்பூரில் கடந்த சில தினங்களாக வன்முறை சற்று தணிந்து காணப்பட்டது. ஆனால், இன்று காலை, காங்போக்பி மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இரேங் மற்றும் கரம் வைப்பெய் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே நேற்று கலவரம் வெடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இன்று காலை 8:30 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர்களால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பொதுமக்களிடையே மீண்டும் அச்சம் பரவத் தொடங்கியுள்ளது.