நாக்பூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி

April 25, 2023

நாக்பூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூர் மாவட்டம் சோனேகாவ் நிபானி எம்.ஐ.டி.சி. பகுதியில் கடாரியா ஆக்ரோ என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் காலை 11 மணியளவில் திடீரென நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதை தொடர்ந்து அங்கு இருந்த சில பொருட்கள் பயங்கர சத்த்துடன் வெடித்து சிதறியது. […]

நாக்பூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாக்பூர் மாவட்டம் சோனேகாவ் நிபானி எம்.ஐ.டி.சி. பகுதியில் கடாரியா ஆக்ரோ என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் காலை 11 மணியளவில் திடீரென நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதை தொடர்ந்து அங்கு இருந்த சில பொருட்கள் பயங்கர சத்த்துடன் வெடித்து சிதறியது. தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைத்தனர்.

மேலும் தொழிற்சாலையில் சிக்கி தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தீக்காயம் அடைந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu