தமிழ்நாட்டில் சில இடங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும், நாளை மறுதினமும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.