பேரிடர் மேலாண்மைக்கு ரூ.8000 கோடியில் 3 திட்டங்கள் - மத்திய அமைச்சர் அமித் ஷா

பேரிடர் மேலாண்மைக்கு ரூ.8,000 கோடியில் 3 திட்டங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அனைத்து மாநிலங்களில் உள்ள தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ.5,000 கோடி மதிப்பிலான நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் […]

பேரிடர் மேலாண்மைக்கு ரூ.8,000 கோடியில் 3 திட்டங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அனைத்து மாநிலங்களில் உள்ள தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ.5,000 கோடி மதிப்பிலான நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் வெள்ள பாதிப்பு அபாயத்தை குறைக்க ரூ.2,500 கோடி வழங்கப்படும். 17 மாநிலங்களில் நிலச்சரிவை எதிர்கொள்ள ரூ.825 கோடியை மத்திய அரசு வழங்கும் என்றார். மேலும் பேரிடர் ஏற்படும் வாய்ப்புள்ள 350 மாவட்டங்களில் ‘ஆப்டா மித்ரா’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தன்னார்வ தொண்டர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர். இது பேரிடர்களை சமாளிப்பதில் நல்ல பலனை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu