அமெரிக்காவில் திடீரென வீசிய பயங்கர புயலால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பெரிடன் நகரில் புயல் காற்று வீசியது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்தடை செய்யப்பட்டது. இதனால் பல நகரங்கள் இருளில் மூழ்கின. மேலும் இந்த புயலால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன. அத்துடன் இடிபாடுகளில் சிக்கியும் 3 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அதே போல் சிலரை பற்றி தகவல் ஏதும் கிடைக்காததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.