குஜராத்தில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் பலி

குஜராத்தில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சாதனா காலனி பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அவர்கள் குருகோபிந்த் சிங் அரசு […]

குஜராத்தில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சாதனா காலனி பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu