மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் பாதை பணிக்காக ரூ.300 கோடி ஒப்பந்தம்

April 27, 2023

மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை பணிகளுக்காக ரூ.300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் (2-ம் கட்டம்) 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் அதுதொடர்பான அனைத்து வகை பணிகளுக்கும் ரூ.299 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் லார்சன் அண்ட் டூப்ரோ என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் […]

மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை பணிகளுக்காக ரூ.300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் (2-ம் கட்டம்) 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் அதுதொடர்பான அனைத்து வகை பணிகளுக்கும் ரூ.299 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் லார்சன் அண்ட் டூப்ரோ என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட திட்டத்துக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu