சேலம் - ஆளுநருக்கு கருப்பு கொடி - 300 பேர் கைது

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொள்ள இருந்தார். இன்று நடைபெறும் விழாவிற்கு அவர் வருகை தந்த போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டினர். சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்பு திரண்டு இருந்த மக்கள், கருப்பு கொடி காட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், கிட்டத்தட்ட 300 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் […]

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொள்ள இருந்தார். இன்று நடைபெறும் விழாவிற்கு அவர் வருகை தந்த போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டினர். சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்பு திரண்டு இருந்த மக்கள், கருப்பு கொடி காட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், கிட்டத்தட்ட 300 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிட விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட 9 கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, ஆளுநர் ஆர் என் ரவி, திராவிட கொள்கைகளுக்கு எதிராக செயலாற்றி வருவதாக கருத்து நிலவுகிறது. எனவே, அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இவ்வாறு கருப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu