கேரள மாநிலத்தில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் இதன் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2000- ஐ தாண்டியுள்ளது. இதுவரை மாநிலத்தில் 2041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேரளாவில் பாதிப்பு அதிகரித்த போதிலும் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.














