ஆந்திராவில் ஹிந்து மதத்தை பாதுகாக்கும் வகையில் 3,000 புதிய கோவில்கள்

ஹிந்து மதத்தை பாதுகாக்கும் வகையில், 3,000 கோவில்களை ஆந்திர அரசு கட்டி வருகிறது. இதுகுறித்து ஆந்திர மாநிலத் துணை முதல்வரும், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சருமான கோட்டு சத்தியநாராயணா நேற்று கூறுகையில், முதல்வரின் உத்தரவின்படி, ஹிந்து மதத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும், ஹிந்து மத நம்பிக்கைகளை பரப்பும் நடவடிக்கைகளிலும் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. கோவில்கள் கட்டுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி அறக்கட்டளை, கோவில் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் […]

ஹிந்து மதத்தை பாதுகாக்கும் வகையில், 3,000 கோவில்களை ஆந்திர அரசு கட்டி வருகிறது.

இதுகுறித்து ஆந்திர மாநிலத் துணை முதல்வரும், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சருமான கோட்டு சத்தியநாராயணா நேற்று கூறுகையில், முதல்வரின் உத்தரவின்படி, ஹிந்து மதத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும், ஹிந்து மத நம்பிக்கைகளை பரப்பும் நடவடிக்கைகளிலும் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. கோவில்கள் கட்டுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி அறக்கட்டளை, கோவில் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கோவில்கள் கட்டும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே 1,330 கோவில்கள் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன. புதிதாக 1,465 கோவில்கள் கட்டப்பட உள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகளை ஏற்று 200க்கும் மேற்பட்ட கோவில்கள் என மொத்தம் 3,000 புதிய கோவில்கள் கட்டப்படுகின்றன என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu