கடலுக்குள் 30,000 மெகாவாட் திறன்கொண்ட காற்றாலைகள்

கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை அமைக்க மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறுகையில், : தமிழக கடற்கரைப் பகுதிகளில் 30 ஜிகாவாட் (30 ஆயிரம் மெகாவாட்) திறன் கொண்ட காற்றாலைகளை கடலுக்குள் அமைக்க மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த காற்றாலைகள் […]

கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை அமைக்க மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறுகையில், : தமிழக கடற்கரைப் பகுதிகளில் 30 ஜிகாவாட் (30 ஆயிரம் மெகாவாட்) திறன் கொண்ட காற்றாலைகளை கடலுக்குள் அமைக்க மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த காற்றாலைகள் ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் அமைக்கப்பட உள்ளன. கடலுக்குள் காற்றாலைகளை அமைப்பது தொடர்பாக, டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்கெனவே ஆய்வுசெய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.

இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 2 ஜிகாவாட் திறன்கொண்ட காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. நிலப்பரப்பில் அமைக்கப்படும் காற்றாலைகளில் 2 மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் கடலுக்குள் அமைக்கப்படும் காற்றாலைகளில் 15 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu