மாலியில் ஆற்று பாலத்தில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலி

February 28, 2024

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பேருந்து ஒன்று ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலியாகினர். மாலியில் இருந்து பர்கினோ பாசோவிற்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். தெற்கு பகுதியில் உள்ள கோமண்டு அருகே பேருந்து ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பேருந்து பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 31 பேர் உயிரிழந்தனர். 10 பேர் […]

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பேருந்து ஒன்று ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலியாகினர்.

மாலியில் இருந்து பர்கினோ பாசோவிற்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். தெற்கு பகுதியில் உள்ள கோமண்டு அருகே பேருந்து ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பேருந்து பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 31 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உலக அளவில் நடைபெறும் வாகன விபத்துகளில் நான்கில் ஒரு பகுதி ஆப்பிரிக்காவில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu