பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318 கோடி ரூபாய் இழப்பீடு

January 10, 2023

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 318 கோடி இழப்பீடு தொகையை முதலமைச்சர் வழங்கினார். பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-2022-ம் ஆண்டு குளிர் பருவ (ரபி) பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.276.85 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ரூ.152 கோடியும், இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் […]

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 318 கோடி இழப்பீடு தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-2022-ம் ஆண்டு குளிர் பருவ (ரபி) பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.276.85 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ரூ.152 கோடியும், இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் ரூ.132 கோடியும் என மொத்தம் ரூ. 284 கோடி தற்போது இழப்பீட்டுத் தொகையாக சுமார் 2.02 லட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 80,357 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் பாதிப்படைந்தது. மேலும், இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சுமார் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.318.30 கோடி இழப்பீடு தொகை முதல்வர் வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu