இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று 324 பேருக்கு உறுதி

இந்தியாவில் 324 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலக அளவில் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு படிப்படியாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25 ஆயிரத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா […]

இந்தியாவில் 324 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இது உலக அளவில் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு படிப்படியாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25 ஆயிரத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது கே.பி. -1, மற்றும் கே. பி.-2 என இரண்டு வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 324 பேருக்கு புதிதாக இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் 290 பேருக்கு கே.பி 2 வகை கொரோனா ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி-1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu