தமிழகத்தின் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.
இதற்கான பணிகளை பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டை தொடங்கி வைக்க உள்ளார். முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அம்ருத் பாரத் ரயில் நிலையம் என்ற திட்டத்தின்படி மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, காத்திருப்பு அறை, இலவச வைபை வசதி, மின் தூக்கி - மின் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் உள்ள 1318 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த பணிகளை கடந்த ஆண்டு பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை நாளை தொடங்கி வைக்க உள்ளார்.