மருத்துவ படிப்புக்கு 36,100 பேர் விண்ணப்பம்

October 7, 2022

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் நடைபெற்றது. இந்த விண்ணப்ப பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கியது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப் பதிவு அவகாசம், நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அரசு […]

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு, 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் நடைபெற்றது. இந்த விண்ணப்ப பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கியது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப் பதிவு அவகாசம், நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்து 457 பேர் உட்பட, மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர். பதிவு செய்த விண்ணப்பங்களுக்கான பரிசீலனை இன்று துவங்குகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu