ராஜஸ்தானில் ஹீட் ஸ்ட்ரோக்கால் 3622 பேர் பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தின் அதிக வெப்பத்தின் காரணமாக 3622 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் நாடு முழுவதும் வாட்டி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. மேலும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதுடன் வெப்பத்தின் செல்சியஸ் அளவு கூடி வருகிறது. அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் அதிக வெப்பத்தின் காரணமாக 3622 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு […]

ராஜஸ்தான் மாநிலத்தின் அதிக வெப்பத்தின் காரணமாக 3622 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் நாடு முழுவதும் வாட்டி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. மேலும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதுடன் வெப்பத்தின் செல்சியஸ் அளவு கூடி வருகிறது. அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் அதிக வெப்பத்தின் காரணமாக 3622 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இதேநிலை அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கும் தொடர வாய்ப்புள்ளதாகவும் மே 29ஆம் தேதி முதல் வெப்பநிலை குறைய தொடங்கும் எனவும் அம்மாநில வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu