'ரெயில் மதாத்' செயலி மூலம் பிரச்சினைகளுக்கு 37 நிமிடத்தில் தீர்வு

February 14, 2023

ரெயில் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு 'ரெயில் மதாத்' செயலி மூலம் 37 நிமிடத்தில் தீர்வு காணப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பயணிகளின் குறைகளுக்கு உடனடி தீர்வு கண்டிட 2019-ம் ஆண்டு முதல் ரெயில் மதாத் என்ற செயலியை அறிமுகப்படுத்தி குறைகளை குறித்த காலத்தில் தீர்த்து வருகிறது. இந்த செயலி மூலம் குறுஞ்செய்தி, தொலைபேசி, சமூக ஊடகம், போன்றவற்றிலிருந்து பெறப்படும் பயணிகளின் குறைகள் களையப்படுகின்றன. 2021-ம் ஆண்டு […]

ரெயில் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு 'ரெயில் மதாத்' செயலி மூலம் 37 நிமிடத்தில் தீர்வு காணப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பயணிகளின் குறைகளுக்கு உடனடி தீர்வு கண்டிட 2019-ம் ஆண்டு முதல் ரெயில் மதாத் என்ற செயலியை அறிமுகப்படுத்தி குறைகளை குறித்த காலத்தில் தீர்த்து வருகிறது. இந்த செயலி மூலம் குறுஞ்செய்தி, தொலைபேசி, சமூக ஊடகம், போன்றவற்றிலிருந்து பெறப்படும் பயணிகளின் குறைகள் களையப்படுகின்றன.

2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தெற்கு ரெயில்வே 'ரெயில் மதாத்' மூலம் பயணிகள் குறைகளுக்கு 37 நிமிடத்தில் தீர்வு கண்டு வருகிறது. 2022-23-ம் நிதி ஆண்டில் ஜனவரி மாதம் வரை 75,613 பயணிகள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான 2021-22-ம் நிதியாண்டில் 31,450 குறைகள் மட்டுமே பதிவு பெற்று தீர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu