காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பொதுமக்கள் பலி

January 2, 2023

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சித்ரா பகுதியில் டிசம்பர்.28ல் என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளிடம் இருந்தும் 7 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு எம்4 ரக துப்பாக்கி, 3 பிஸ்டல், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 3 […]

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சித்ரா பகுதியில் டிசம்பர்.28ல் என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளிடம் இருந்தும் 7 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு எம்4 ரக துப்பாக்கி, 3 பிஸ்டல், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். மேல் டாங்கிரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கல் சம்பவத்தால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தகப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu