மாநகராட்சி பெண் மேயர்களுக்கு கோவையில் இன்று முதல் 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள சென்னை பெருநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகளில் உள்ள அனைத்து பெண் மேயர்களுக்கும் இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி கோவையில் உள்ள நகரியல் பயிற்சி மையத்தில் தொடங்குகிறது.
இந்த பயிற்சியில் மேயர்களுக்கான பணிகள் குறித்தும், நிர்வாக ரீதியாக அவர்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும், வளர்ச்சி திட்டங்களை எப்படி மேற்கொள்வது உள்ளிட்ட விரிவான தகவல்கள் அளிக்கப்பட உள்ளது. சென்னை, வேலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பெண் மேயர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.