அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ஹெலிகாப்டர், ஹூஸ்டன் நகரின் அருகே ரேடியோ கோபுரத்துடன் மோதியது. இதனால் விமானத்தின் கட்டுப்பாடு இழந்து, ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், ஒரு குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஹெலிகாப்டர் மோதியதற்கு பிறகு தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இந்த கோரமான சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.














