பழனிவேல் தியாகராஜன் உள்பட 4 பேர் இலாகா மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது. மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். செய்தித்துறை அமைச்சராக இருந்த சாமிநாதனிடம் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தகவல், பட தொழில்நுட்பம் உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை விலக்கப்பட்டு தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் சேவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜனுக்கு பால்வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.