பெஞ்சமின் நெதன்யாகு தேசியத் தேர்தலில் வெற்றி பெற்று இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்ற நாளான வியாழன் அன்று காசா பகுதியில் இருந்து நான்கு ராக்கெட்டுகள் வீசப்பட்டன.
இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேலின் இராணுவத்தின் அறிக்கை கூறுவதாவது, 'காசா பகுதியில் இருந்து நான்கு ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அப்போது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு நான்கு ஏவுகணைகளில் ஒன்றை இடைமறித்தது.
இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு ஜெனினில் அல்-குத்ஸ் படையின் தளபதி படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் யாயர் லாபிட் வியாழக்கிழமை பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தோல்வியை ஒப்புக்கொண்டார். லாபிட் தனது எதிர்ப்பாளரை வாழ்த்தி, "இஸ்ரேல் அரசு அனைத்து அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு மேலானது. இஸ்ரேல் மக்கள் மற்றும் தேசத்தின் நலனுக்காக நெதன்யாகு வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.