இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங்க் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங்க் புனியா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். இந்நிலையில், தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
இந்த ஊக்கமருந்து தடைவிதிப்பு, ஏப்ரல் 23-ந்தேதி முதல் விதிக்கப்பட்டது. இந்த இடைநீக்கத்தால் பஜ்ரங் புனியா மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ, வெளிநாட்டு பயிற்சிகளைப் பெறவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டு தடைவிதிப்பினால் அவரது எதிர்கால போட்டிகளில் பங்கேற்பது கடினமாகும், இது அவரது மையமாகிய மல்யுத்த சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.