சோமாலியா, கென்யாவில் வெள்ளப்பெருக்கு - 40 பேர் பலி

November 9, 2023

ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் கென்யா நாடுகளில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 40 பேர் பலியாகினர். சோமாலியாவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு ஜுபாலாந்து பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஜூபா மற்றும் ஷாபெல்லே ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியாகினர். மேலும் சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதமடைந்தன. இந்த கோர சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதிகளில் அரசு அவசரநிலை பிறப்பித்து […]

ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் கென்யா நாடுகளில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 40 பேர் பலியாகினர்.
சோமாலியாவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு ஜுபாலாந்து பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஜூபா மற்றும் ஷாபெல்லே ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியாகினர். மேலும் சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதமடைந்தன. இந்த கோர சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதிகளில் அரசு அவசரநிலை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.லுக் மாவட்டத்தில் சுமார் 2004 நானூறுக்கும் மேலான குடியிருப்பாளர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்க மீட்பு பணியாளர்கள் முயற்சி செய்கின்றனர். அதோடு கரையோரம் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகளில் அரசு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதே போல் அண்டை நாடுகளான கென்யா மற்றும் எத்தியோப்பியாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டோரை மீட்பதில் மீட்பு பணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.கென்யாவில் மொம்பாசா, மண்டேரா மற்றும் வஜீர் போன்ற பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இங்கு வெள்ளம் காரணமாக 241 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்துள்ளது. சுமார் 1067 கால்நடைகள் மடிந்து விட்டதாக தென்யா செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. எனவே கென்யாவில் டிசம்பர் வரை வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu