அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான எஃப் ஐ எஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவில் 400 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில், ஃபெடலிட்டி நேஷனல் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் (FIS) நிறுவனம் புனே நகரில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த பணியாளர் ஒருவருக்கு, டிசம்பர் 30 தேதி வரை வீட்டிலேயே இருக்குமாறும், அதுவே அவரது இறுதி பனி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதைப் போன்ற பணி நீக்க அறிக்கைகள், 400 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, பணி அனுபவம் மற்றும் சம்பளத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. FIS நிறுவனத்தில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் பெரிஸ், செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பகுதியாக இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.














