அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்படும் - பிரகலாத் ஜோஷி

அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிலக்கரி சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், பெங்களூரு-தார்வார் இடையே அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று வட கர்நாடக மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது வந்தேபாரத் ரெயில் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெலகாவி பாதையில் இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட […]

அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிலக்கரி சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், பெங்களூரு-தார்வார் இடையே அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று வட கர்நாடக மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது வந்தேபாரத் ரெயில் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெலகாவி பாதையில் இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட சில தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் நிறைவடைந்த பிறகு இந்த ரெயிலை பெலகாவி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நாட்டில் இதுவரை 23 வந்தேபாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரெயில்களின் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu