43 இந்தியர்கள் உட்பட 186 பேரை வெளியேற்றியது மாலத்தீவு

February 15, 2024

போதைப்பொருள் பயன்பாடு, விசா விதி மீறல் போன்ற குற்றச்சாட்டில் இந்தியாவை சேர்ந்த 43 பேர் உட்பட வெளிநாட்டவர்கள் 186 பேரை மாலத்தீவு அரசு அந்நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. வெளியேற்றப்பட்டவர்களின் பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த 83 பேர் உள்ளனர். அடுத்ததாக இந்தியர்கள் 43 பேர் உள்ளனர். இலங்கையை சேர்ந்து 25 பேர் மற்றும் நேபாளத்தை சேர்ந்த எட்டு பேர் உள்ளனர். இந்த தகவலை மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட […]

போதைப்பொருள் பயன்பாடு, விசா விதி மீறல் போன்ற குற்றச்சாட்டில் இந்தியாவை சேர்ந்த 43 பேர் உட்பட வெளிநாட்டவர்கள் 186 பேரை மாலத்தீவு அரசு அந்நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

வெளியேற்றப்பட்டவர்களின் பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த 83 பேர் உள்ளனர். அடுத்ததாக இந்தியர்கள் 43 பேர் உள்ளனர். இலங்கையை சேர்ந்து 25 பேர் மற்றும் நேபாளத்தை சேர்ந்த எட்டு பேர் உள்ளனர். இந்த தகவலை மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட தேதி குறித்து விவரம் இல்லை. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாலத்தீவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து பொருளாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறோம். இங்கு பதிவு செய்யப்படும் மற்றும் பதிவு செய்யப்படாத தொழில்கள் நடைபெற்று வருகிறது. மாலத்தீவை சேர்ந்தவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு வெளிநாடுகளை சேர்ந்தவர்களால் இது நடத்தப்படுகிறது. இது போன்ற தொழில்களை மூடி வருகிறோம் இதில் தொடர்புடைய வெளிநாட்டவர்களையும் வெளியேற்றி வருகிறோம். பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 186 பேரை வெளியேற்றியுள்ளோம். இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுக்க வாரத்திற்கு மூன்று முறை காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றபடி எந்த குறிப்பிட்ட பிரிவினரையும் குறி வைத்து இந்த சோதனை நடத்தப்படவில்லை என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu