சீனாவின் தென்மேற்கு பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த நிலச்சரிவினால் 2 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், பலர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 47 பேர் பூமியில் புதைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில், இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த 200க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் அந்த பகுதியைச் சேர்ந்த பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நவீன இயந்திரங்கள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படை வீரர்கள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.














