தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழிதடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் மூன்றரை மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சென்னை - கடற்கரை, செங்கல்பட்டு -கடற்கரை, தாம்பரம் கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சிபுரம் - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே வெவ்வேறு நேரங்கள் மற்றும் மறு மார்க்கத்திலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கான விவரங்களையும் அது வெளியிட்டுள்ளது.














