ஆபரேஷன் சிந்து மூலம் 4400 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு

ஈரான்–இஸ்ரேல் இடையிலான பதட்டத்தைத் தொடர்ந்து, அந்நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் மீட்புக்காக மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் நடவடிக்கையை தொடங்கியது. இதனால் பலர் பாதுகாப்பாக நாடு திரும்பினர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட பதட்ட நிலைமையால் அங்கு வசித்த இந்தியர்களை மீட்பதற்காக கடந்த 18ம் தேதி மத்திய அரசு ஆபரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் கீழ், இதுவரை 19 சிறப்பு விமானங்கள் மூலம் 4,415 இந்தியர்கள் பாதுகாப்புடன் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் […]

ஈரான்–இஸ்ரேல் இடையிலான பதட்டத்தைத் தொடர்ந்து, அந்நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் மீட்புக்காக மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் நடவடிக்கையை தொடங்கியது. இதனால் பலர் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட பதட்ட நிலைமையால் அங்கு வசித்த இந்தியர்களை மீட்பதற்காக கடந்த 18ம் தேதி மத்திய அரசு ஆபரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் கீழ், இதுவரை 19 சிறப்பு விமானங்கள் மூலம் 4,415 இந்தியர்கள் பாதுகாப்புடன் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 3,597 பேர் ஈரானில் இருந்து மற்றும் 818 பேர் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பிற நாட்டவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த முயற்சியில் உதவிய அனைத்து நாடுகளுக்கும் மத்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது. நிலவும் சூழ்நிலையை மத்திய அரசு தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu