கால்நடை ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு நிதி உதவி

கால்நடை நலக் கல்வி மைய இயக்குனர் சௌந்தரராஜன், கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரூபாய் 49 லட்சம் வரை நிதியுதவி மத்திய அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று தலைவிகள் என்ற தலைப்பில் வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெண் தொழில் முனைவோருக்கான சந்திப்பு நடைபெற்றது. இதில் 170 க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என். செல்வகுமார், தொடக்கநிலை […]

கால்நடை நலக் கல்வி மைய இயக்குனர் சௌந்தரராஜன், கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரூபாய் 49 லட்சம் வரை நிதியுதவி மத்திய அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று தலைவிகள் என்ற தலைப்பில் வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெண் தொழில் முனைவோருக்கான சந்திப்பு நடைபெற்றது. இதில் 170 க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என். செல்வகுமார், தொடக்கநிலை தொழில் உருவாக்க அமைப்பு மற்றும் கால்நடை நலக்கல்வி இயக்குனர் சௌந்தர்ராஜன் ஆகிய ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றனர்.

இதில் கே. என் செல்வகுமார் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மகளிர் தொழில் முனைவோரின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 10% பேராவது தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் எனவும் கூறினார். இதனை அடுத்து கால்நடை நலக்கல்வி இயக்குனர் சௌந்தரராஜன் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை விலங்கியல் சார்ந்தஆய்வுகளை மேற்கொள்பவர்கள் தங்களது முயற்சிகளை பல்கலைக்கழக ஆய்வகத்திலேயே மேற்கொள்ளலாம். கண்டுபிடிப்புகளுக்கு அதிக செலவாகும் பட்சத்தில் தமிழக அரசு சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் நிதியளவில் அளிக்கவுள்ளது. அதேபோல் மத்திய அரசு ரூபாய் 49 லட்சம் வரை நிதி உதவி வழங்குகிறது. கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வில் கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டுதல் மட்டுமின்றி நிதி உதவியும் வழங்கி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu