சிரியாவில் வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் தவிப்பு - ஐ.நா தூதரக அதிகாரி

February 11, 2023

ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி சிவாங்கா தனபாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, சிரியா நாட்டில் 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என தெரிவித்து உள்ளார். அவர் தொடர்ந்து, நாங்கள் பாதுகாப்பு பிரிவிலும் முன்னணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். சிரியா முழுவதும் சமூக மையங்கள், செயற்கைக்கோள் மையங்கள், தேவையான தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்ட நெட்வொர்க்கை வைத்திருக்கிறோம். இவற்றின் உதவியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடிகிறது. அனைத்து வித பாதுகாப்பு தொடர்புடைய விசயங்களுக்கும் ஹாட்லைன்களை அமைத்து இருக்கிறோம். […]

ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி சிவாங்கா தனபாலா செய்தியாளர்களிடம் கூறும்போது, சிரியா நாட்டில் 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என தெரிவித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து, நாங்கள் பாதுகாப்பு பிரிவிலும் முன்னணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். சிரியா முழுவதும் சமூக மையங்கள், செயற்கைக்கோள் மையங்கள், தேவையான தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்ட நெட்வொர்க்கை வைத்திருக்கிறோம். இவற்றின் உதவியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடிகிறது. அனைத்து வித பாதுகாப்பு தொடர்புடைய விசயங்களுக்கும் ஹாட்லைன்களை அமைத்து இருக்கிறோம். அவற்றை பயன்படுத்தி உதவி தேவைப்படுவோருக்கு வேண்டிய விசயங்களை உடனடியாக ஓடி சென்று செய்து வருகிறோம் என கூறியுள்ளார். சிரியாவில் மோசமடைந்த பகுதிகளுக்கு ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு உடனடியாக சென்று பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. இதன்படி, கூடாரங்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள், குளிர்கால ஆடைகள் உள்ளிட்ட தேவையான வசதிகளை அளித்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu