எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.5.35 கோடி போதை பொருள் பறிமுதல்

December 21, 2022

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.5.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 18ந் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த உகாண்டா நாட்டு பெண் பயணி வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மோப்ப நாய் ஓரியோ, பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த போதை பொருளை அதிகாரிகளுக்கு […]

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.5.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 18ந் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த உகாண்டா நாட்டு பெண் பயணி வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மோப்ப நாய் ஓரியோ, பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த போதை பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது.

இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து சோதனையிட்ட அதிகாரிகள் அதில் இருந்து 1,542 கிராம் எடையுள்ள மெத்தகுலோன் மற்றும் 644 கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5.35 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu