பிரான்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 பதிவாகியுள்ளது.
பிரான்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸின் நிலப்பரப்பு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது மிகவும் அரிதானது. இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என பிரான்ஸ் மந்திரி கிறிஸ்டோபர் பெச்சு தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் பிரான்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2000-ம் ஆண்டு இதுபோன்று சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.