5 மாநில சட்டபேரவை தேர்தலையொட்டி அந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளதால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக 5 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒவ்வொரு சட்ட பேரவை தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி 2023, அக்டோபர் 1ம் தேதியன்று யாரெல்லாம் 18 வயதை பூர்த்தி அடைகிறார்களோ அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.